தமிழ்நாட்டின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக இருக்கும் மதுரை தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாக இருக்கின்றது. இப்படியான மதுரையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். இங்கு அப்படி என்ன சிறப்பு இருக்கின்றது. தெப்பக்குளம் எப்படி உருவானது போன்ற பல சிறப்பம்சங்களை காண்போம். madurai teppakulam history
மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ! வரலாறு மற்றும் கட்டுக்கதை தெரியுமா !
மதுரையில் எங்கிருக்கின்றது தெப்பக்குளம் :
மதுரையின் முக்கிய அம்சமாக இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது தெப்பக்குளம். தெப்பக்குளத்தின் கரையில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் இருக்கின்றது. தெப்பக்குளத்தின் மையப்பகுதியில் புகழ் பெற்ற விநாயகர் கோவில் இருக்கின்றது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் மூலம் அல்லது ஆட்டோ மூலம் வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் பகுதியை நம்மால் அடைய முடியும்.
மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி :
மதுரையை 1529ம் ஆண்டுகளில் இருந்து நாயக்கர்கள் ஆட்சி செய்ய தொடங்கினர். மதுரையை ஆண்ட ஏழாவது நாயக்கர் திருமலை நாயக்கர் ஆவர். இவர் மதுரையை 1623 முதல் 1659ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்தார். மதுரையில் நாயக்கர்கள் ஆட்சியில் திருமலை நாயக்கர் ஆட்சி தான் நாயக்கர்களின் பொற்க்காலம் என்று கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டின் திருநெல்வேலி , மதுரை , திண்டுக்கல் , ராமநாதபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை , மணப்பாறை , கோயம்புத்தூர் , சேலம் மற்றும் திருச்சி போன்ற பகுதிகள் திருமலை நாயக்கர் கட்டுப்பாட்டில் பாளையக்காரர்கள் மூலம் ஆட்சி நடத்தப்பட்டது.
கட்டிடக்கலையில் ஆர்வம் கொண்ட திருமலை நாயக்கர் :
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் கட்டிடக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவர் திருவில்லிபுத்தூர் ஆண்டாளின் தீவிர பக்தராக இருந்தவர். மதுரையில் ஆண்டாள் கோவில் பூசை மணி ஓசையை அறிந்து கொள்ள வேண்டி பல மண்டபங்களை கட்டினார். பல கோவில்களை காட்டினார். மதுரையின் புதுமண்டபம் மற்றும் திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவைகள் இவரின் கட்டிடக்கலையின் முக்கிய அம்சமாக இருக்கின்றது.
பிரதமர் அருகில் இருக்கும் SPG கையில் இருக்கும் Bag ரகசியம் தெரியுமா !
திருமலை நாயக்கர் அரண்மனை :
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அரண்மனையானது 58 அடி உயரத்தில் 248 பெரிய தூண்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கின்றது. அரண்மனையில் ” சொர்க்க விலாசம் ” மற்றும் ” அரங்க விலாசம் ” என்ற இரண்டு அமைப்புகளை கொண்டிருந்ததது. சொர்க்க விலாசம் மன்னர் நாயக்கரின் வசிப்பிடமாகவும் அரங்க விலாசம் நாயக்கர் தம்பியின் வசிப்பிடமாகவும் இருந்துள்ளது.
மேலும் அரண்மனையில் நாடகசாலை , பல்லக்கு சாலை , ஆயுத சாலை , இசை மண்டபம் , வழிபாட்டு இடம் , அரச குடும்பம் தங்கும் இடம் , பணியாளர்கள் தங்கும் இடம் , அந்தப்புரம் மற்றும் பூங்காக்கள் என்று தனித்தனியே கட்டப்பட்டு இருந்தது. தற்போது இருக்கின்ற நாயக்கர் அரண்மனையானது நான்கில் ஒரு பகுதி தான். திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்கு தேவையான மணல் தெப்பக்குளம் பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு இருக்கின்றது. 1971ம் ஆண்டு தான் மதுரை நாயக்கர் அரண்மனை தேசிய நினைவு சின்னமாக அரசால் அறிவிக்கப்பட்டது. தற்போது தொல்லியல் துறையினரால் மதுரை நாயக்கர் அரண்மனை பராமரிக்கப்பட்டு வருகின்றது.
மதுரை தெப்பக்குளம் உருவானது எப்படி :
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் அரண்மனையை காட்டினார். தற்போது இருக்கும் அரண்மனை நான்கில் ஒரு பகுதி தான். எனவே இவ்வளவு பெரிய அரண்மனை கட்டுவதர்க்கு அதிகளவு மணல் தேவைப்பட்டதால் மணல் எடுத்த பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த பள்ளத்தினை மன்னன் சீராக சதுர வடிவில் வடிவமைத்தார். இதன் மையத்தில் ஒரு மண்டபத்தினையும் அமைத்தார். இந்த மண்டபத்தினை வசந்த மண்டபம் என்று அழைப்பார்கள். 1645ல் பள்ளம் தெப்பக்குளமாக மாற்றம் பெற்றது. திருமலை நாயக்கர் பிறந்த நாள் அன்று தைப்பூச திருநாளாகவும் இருப்பதால் மன்னரால் தைப்பூச நாளில் தெப்பக்குளம் திறக்கப்பட்டு உள்ளது.
உங்கள் I’D Proofல் நீங்கள் பயன்படுத்தாத சிம் கார்டு இருக்கா ! பிளாக் பண்ண வழி இதோ !
தெப்பக்குளத்தின் சிறப்புகள் :
1. தெப்பக்குளத்தில் மையப்பகுதியில் இருக்கும் வசந்த மண்டபத்தில் விநாயகர் கோவில் இருக்கின்றது.
2. 1,000 அடி நீளம் மற்றும் 950 அடி அகலத்துடன் சதுர வடிவில் வெட்டி தெப்பக்குளம் கட்டப்பட்டு இருக்கின்றது.
3. தெப்பக்குளத்தின் நான்கு பக்கத்திலும் 12 நீளமான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
4. 15 அடி உயரமான சுற்றுச்சுவர் தெப்பக்குளத்தில் நான்கு பகுதிகளிலும் கற்கள் மட்டுமே கொண்டு கட்டப்பட்டு உள்ளது.
5. வைகை நதியின் நீர் பல்வேறு சுரங்க பாதைகளின் வழியே தெப்பக்குளம் பகுதிக்கு வரும் படி கட்டப்பட்டு உள்ளது.
6. தைப்பூசம் அன்று இங்கு நடக்கும் தெப்பத்திருவிழா மதுரையின் மற்றொரு சிறப்பம்சம்.
7. 115 அடி கனநீரை சேகரிக்கும் படி தெப்பக்குளம் இருக்கின்றது.
8. 29 அடி ஆழம் கொண்டது மதுரை வண்டியூர் தெப்பக்குளம்.
தெப்பக்குளம் கட்டுக்கதை :
மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் அரண்மனை கட்ட மணல் எடுத்து பின்னர் பள்ளம் ஏற்பட்ட இடத்தினை மன்னர் தெப்பக்குளமாக மாற்றினார் என்று மதுரை மக்கள் கதையாக கூறினாலும் இவைகள் அனைத்தும் உண்மை இல்லை என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். மதுரைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் 1865ல் வெட்டப்பட்டது தான் தெப்பக்குளம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.