இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள்இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள்

இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள். ஒருவரிடம் இருந்து மற்றவர்களை வேறுபடுத்தி காட்டுவதில் ஒன்று ” பெயர் “. இதனால் தான் குழந்தை பிறந்த உடன் அவைகளுக்கு நாம் பெயர் சுட்டி விடுகின்றோம். கடவுள் பெயர் , தலைவர்கள் பெயர் , பிரபலங்கள் பெயர் , அதிர்ஷ்ட பெயர்கள் என குழந்தைகளுக்கு அழகிய பெயரை சூட்ட வேண்டும் என்பதற்க்காக அர்த்தம் அறிந்து தேடி தேடி பெயர் வைக்கின்றோம். இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்டு இருக்கின்ற பெயர்களின் ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. இவைகளின் படி இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்டு இருக்கின்ற முதல் பத்து பெயர்களை காண்போம். 

இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் ! முதல் இடத்தில் உங்க பெயர் இருக்க வாய்ப்பு இருக்கு !

இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள்

10வது இடம் பிடித்திருக்கும் பெயர் :  

 ” கீதா ” என்னும் பெயர் இந்தியாவில் அதிகளவில் சூட்டப்பட்டு இருக்கின்ற பெயர்களில் பத்தாவது இடத்தில் இருக்கின்றது. சிறப்பாக பெண்களுக்கு மற்றும் சூட்டப்படும் பெயரான கீதா என்னும் பெயர் இந்தியாவில் மட்டும் சுமார் 28 லட்சத்து 60 ஆயிரம் பேர்களுக்கு மேல் வைத்து இருக்கின்றனர்.

9வது இடம் பெற்றிருக்கும் பெயர் :

29 லட்சத்து 10 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்தியாவில் ” ராஜேஷ் ” என்னும் பெயர் வைத்து இந்தியாவில் அதிகம் வைத்து இருக்கின்ற பெயர்களில் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது. ஒன்பதாவது இடத்தில் இருக்கும் ராஜேஷ் என்னும் பெயர் பொதுவாக ஆண்களுக்கு வைக்கப்படும் பெயராக இருக்கின்றது

JOIN SKSPREAD WHATSAPP GROUP

8வது இடத்தில் இருக்கின்ற பெயர் :

இந்தியாவில் அதிகளவு சூட்டப்படும் பெயர்களில் எட்டாவது இடத்தில் இருக்கும் பெயர் ” சுனில் “. 30 லட்சத்திற்கும் அதிகமாக இந்தியாவில் சுனில் என்னும் பெயர் வைத்து இருக்கின்றார்கள். 

உதாரணம் : சுனில் கவாஸ்கர் – இந்திய கிரிக்கெட் அணி வீரர் 

7வது இடம் பிடித்திருக்கும் பெயர் :

இந்தியாவில் அதிகம் வைத்திருக்கும் பெயர்களில் ஏழாவது இடத்தில் இருக்கும் பெயர் ” சஞ்சய் “. இந்தியாவில் ஆண்களுக்கு வைக்கப்படும் பெயரான சஞ்சய் சுமார் 31 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மேல் சூட்டப்பட்டு இருக்கின்றது. 

உதாரணம் : சஞ்சய் தத் – இந்திய நடிகர் 

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ! வரலாறு மற்றும் கட்டுக்கதை தெரியுமா !

6வது இடத்தில் இருக்கும் பெயர் :

சந்தோஷ் ” என்னும் பெயர் இந்தியாவில் அதிகளவில் வைக்கப்பட்ட பெயர்களில் ஆறாவது இடத்தில் இருக்கின்றது. சந்தோஷ் என்னும் பெயர் ஆண்கள் சூட்டும் பெயராக இருந்தாலும் சுமார் 34 லட்சங்களுக்கு அதிகமான நபர்கள் வைத்து இருக்கின்றனர். 

5வது இடம் பெற்றிருக்கும் பெயர் :

 ” அனிதா ” இந்தியாவில் அதிகம் வைக்கப்படும் பெயர்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றது. பெண்களுக்கு மட்டும் சூட்டும் பெயராக அனிதா இருந்தாலும் இந்தியாவில் 35 லட்சத்திற்கும் அதிகமான பேர்கள் வைத்து இருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டிலும் அதிகம் சூட்டும்  பெயராக அனிதா இருக்கின்றது.

இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள்

4வது இடம் பிடித்திருக்கும் பெயர் :

இந்தியாவில் அதிகம் வைக்கப்படும் பெயர்களில் நான்காவது இடத்தில் இருக்கும் பெயர் ” ஸ்ரீ “. ஸ்ரீ என்னும் பெயரை இந்தியாவில் 37 லட்சத்திற்கும் அதிகமாக சூட்டி இருக்கின்றனர். ஸ்ரீ என்னும் பெயர் ஒரு நபருக்கு தனியாகவும் அல்லது பெயரின் முன் அல்லது பெயரின் பின்னல் வைக்கப்படுகின்றது. ஸ்ரீ என்னும் பெயரை 88% ஆண்களுக்கும் 12% பெண்களுக்கும் வைக்கின்றார்கள்.

உதாரணம் : ஸ்ரீகாந்த – தமிழ் நடிகர் 

                        தேஜ ஸ்ரீ

                        ஸ்ரீ 

3வது இடத்தில் இருக்கும் பெயர் :

சுனிதா ” என்னும் பெயர் இந்தியாவில் 40 லட்சத்து 60 ஆயிரம் பேர்களுக்கு மேல் வைத்து இந்தியாவில் அதிகளவில் வைத்துள்ள பெயர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. சுனிதா என்னும் பெயர் வட நாடுகளில் அதிகமாக வைக்கப்படுகின்றது.

JOIN SKSPREAD FACEBOOK PAGE

2வது இடம் பெற்றிருக்கும் பெயர் :

முகமத் ” என்னும் பெயர் இந்தியாவில் அதிகளவு சூட்டப்பட்ட பெயர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இந்தியாவில் சுமார் 42 லட்சத்து 30 ஆயிரம் பேர்களுக்கு அதிகமாக முகமத் என்னும் பெயர் வைத்து இருக்கின்றார்கள். மேலும் இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வரு 287 நபர்களுக்கு ஒரு முகமத் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இடத்தில் இருக்கும் பெயர் :

இந்தியாவில் அதிகளவு பெயர் சூட்டப்பட்டு முதல் இடத்தில் இருக்கும் பெயர் ” ராம் “. சுமார் 56 லட்சத்து 48 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமாக ராம் என்னும் பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வரு 215 பேர்களில் ஒரு ராம் என்னும் பெயர் வைக்கப்படுகின்றது. மேலும் 92% ஆண்களுக்கும் 8% பெண்களுக்கும் வைக்கப்படுகின்றது.

உதாரணம் : சித் ஸ்ரீ ராம் 

                        ராம் பிரசாத் 

                        ராம் நிஷாந்த் 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *