லாரிகளில் ஏ.சி கட்டாயம். இந்தியாவில் வருகின்ற 2025ம் ஆண்டு முதல் விற்பனை ஆகும் கனரக வாகனங்களில் கேபின் பகுதியில் கட்டாயம் AC குளிர்சாதன வசதி இடம் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்கள் இயக்கும் டிரைவர்களின் நலன் கருதியே புதிய திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்களில் AC பொருத்தும் திட்டம் லாரி டிரைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தாலும் லாரியில் AC பொருத்தினால் விலை உயரும் என்ற தயக்கமும் டிரைவர்கள் மத்தியில் இருக்கின்றது.
லாரிகளில் ஏ.சி கட்டாயம் ! இனி குளு குளுனு ட்ராவல் பண்ணலாம் !
உலகளவில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருப்பது பிற நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள். இத்தகைய ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை பண்டமாற்றம் செய்ய எதுவாக இருக்கும் வாகனம் லாரி போன்ற கனரக வாகனங்களே. ஏற்றுமதி இறக்குமதி செய்த இடத்தில் இருந்து பொருட்களை கடைகளில் சேர்ப்பதற்கு லாரி போன்ற கனரக வாகனங்களை டிரைவர்கள் குறைந்தது 11 மணி முதல் 12 மணி நேரம் வரையில் லாரிகளை தொடர்ந்து இயக்க வேண்டியதாக இருக்கின்றது.
பல்வேறு கால சூழ்நிலையில் லாரி போன்ற வாகனங்களை இயக்குவதால் டிரைவர்களுக்கு ஓய்வு நேரம் குறைவாக இருக்கின்றது. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. கார் மூலம் குறைந்த நேரம் பயணம் செய்தாலே AC இல்லாமல் பயணம் செய்ய முடியாது. ஆனால் கனரக வாகனங்களை இயக்கம் டிரைவர்கள் ஜன்னல் காற்றை மட்டுமே நம்பி வாகனங்களை இயக்குகின்றார்கள். லாரியில் AC பொருத்தப்பட்டு இருந்தால் வசதியான சூழ்நிலை உருவாகும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமே இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘ Volvo , Scania போன்ற கனரக வாகனங்களில் கேபின் பகுதிகளில் AC பெருத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான கனரக வாகனங்களில் AC வசதி இருப்பதில்லை. 2025ம் ஆண்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து லாரிகளிலும் AC கேபின் வசதி பொருத்தப்பட்டு இருக்கும். கனரக வாகனத்திற்குள் AC பொருத்தப்பட்டு இருந்தால் விலை அதிகமாக இருக்கும் என்று சிலர் தயக்கம் காட்டினார். ஆனால் கனரக வாகனத்தில் AC பொருத்தப்பட்டு இருந்தால் லாரி போன்ற கனரக வாகனங்களின் விலை 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் அதிகமாக இருக்கும் ‘ என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.