தமிழ்நாடு TRB வேலைவாய்ப்பு 2023. TRB ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் தகுதியான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. அதன் படி தற்போது இவ்வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
தமிழ்நாடு TRB வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 1,15,700 வரையில் மாத ஊதியம் !
வாரியத்தின் பெயர் :
ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ( Teacher Recruitment Board )த்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் பணியிடங்கள் TRBல் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக இருக்கின்றது.
1. பள்ளிக் கல்வி இயக்குனரகம் – 2171
2. MBC / DNC இயக்குனரகம் – 23
3. ஆதி திராவிடர் நல இயக்குனரகம் – 16
4. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரகம் – 12
கல்வித்தகுதி :
1. பட்டப்படிப்பு மற்றும் தொடக்க கல்வியில் 2 ஆண்டுகள் டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு 2023
2. பட்டப்படிப்பு மற்றும் கல்வியியலில் B.Ed இளங்கலை பட்டம் 50% தேர்ச்சியுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
3. 4 ஆண்டுகள் தொடக்க கல்வியில் இளங்கலை பட்டம் ( B.EI.B.Ed ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
4. BA / B.Sc E.d அல்லது B.A E.d / BSc.Ed படிப்புகளை 50% தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
5. பட்ட படிப்புடன் ( சிறப்பு கல்வி ) B.Ed 50% தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
6. தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ( TNTET ) தாள் 2 தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி ஆட்சேர்ப்புக்கு பொருத்தமானவர்கள் ஆவர்.
சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023 ! மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு !
வயதுத்தகுதி :
53 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் MBC / DNC / DW / பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் 58 வயது வரையில் விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு நிரப்பபப்டும் தகுதியான ஆசிரியர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி மாத ஊதியமாக ரூ 36,400 முதல் ரூ. 1,15,700 வரையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
TRBல் காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு 2023
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் 01.11.2023 முதல் 30.11.2023 வரையில் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.
விண்ணப்பிக்க தேவையானவை :
1. 10ம் வகுப்பு சான்றிதழ்
2. 12ம் வகுப்பு சான்றிதழ்
3. கல்வி சான்றிதழ்
4. சாதி சான்றிதழ்
5. தமிழ் வழிக் கல்வி சான்றிதழ்
6. தகுதி சான்றிதழ்
7. NOC
8. திருநங்கை I’D கார்டு
விண்ணப்பக்கட்டணம் :
1. பொது பிரிவினர் – ரூ. 600
2. SC / ST / SCA – ரூ. 300 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு முறை :
1. தமிழ் மொழி தகுதித்தேர்வு
2. எழுத்து தேர்வு
3. சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர். வேலைவாய்ப்பு 2023
முக்கிய தேதிகள் :
1. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 01.11.2023
2. விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.11.2023
3. தேர்வு நாள் ( OMR ) – 07.01.2024