சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023

  சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023. நாளை (28.10.2023) அன்று சென்னையில் மூன்றாவது முறையாக பிரம்மாண்டமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகமானது நடைபெற இருக்கின்றது. இம்முகமானது நடைபெறும் இடம் , நேரம் , பதிவு கட்டணம் , யார் கலந்து கொள்ள முடியும் போன்ற அனைத்து தகவல்களையும் காணலாம். 

சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023 ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! 

சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023

தனியார் வேலைவாய்ப்பு முகாம் :

  முன்னாள் தமிழக முதல்வர் Dr.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக தமிழ்நாடு முழுவதும் 100 தனியார் வேலைவாய்ப்பு முகமானது நடைபெற்று வருகின்றது. அதன் படி சென்னையில் இரண்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகமானது நடைபெற்று முடிந்து விட்டது. மூன்றாவது முறையாகவும் நாளை சென்னையில் நடைபெற இருக்கின்றது. 

JOIN WHATSAPP GROUP

யார் கலந்து கொள்ள முடியும் :

  நாளை நடைபெற இருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை தேடும் அனைத்து நபர்களும் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை :

  இந்த முகாமில் 150க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,500க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கின்றனர். சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023

அனுமதி கட்டணம் :

  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகமானது நடைபெற இருப்பதால் பதிவு கட்டணம் கிடையாது.

கல்வித்தகுதி :

  தையல் கற்றவர்கள், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் தேர்ச்சி அடைந்தவர்கள் , டிகிரி , ஐடிஐ , டிப்ளமோ முடித்தவர்கள் , பொறியியல் , கணினி பயின்றவர்கள் என அனைத்து துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்களும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு 2023

சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2023 ! 10வது தேர்ச்சி போதும் … உடனே விண்ணப்பிக்கவும் ! 

பதிவு செய்து கொள்ளும் முறை :

  தனியார் துறைகளில் பணி செய்ய ஆர்வமுடைய நபர்கள் எந்த துறையில் கல்வி பயின்றவர்களாக இருந்தாலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவர்கள் நாளை  நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். 

முகாம் நடைபெறும் நேரம் :

  நாளை சென்னையில் நடைபெற இருக்கும் இம்முகமானது காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரையில் நடைபெறும்.

முகாம் நடைப்பெறும் இடம் :

  சைதாப்பேட்டை ,

  மேற்கு ஜோன்ஸ் சாலை , 

  சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி , 

  சென்னை ,

  தமிழ்நாடு .

தொலைபேசி எண் : 044 – 24615160

மின்னஞ்சல் முகவரி : pjpsanthome@gmail.com 

முக்கிய குறிப்பு :

  1. தமிழ்நாடு மாவட்ட தொழில் மையத்தின் சுய தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் வங்கிக்கடன் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

  2. வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலை பெற்றாலும் வேலைவாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. 

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

  தமிழக அரசின் சார்பில் நாளை சென்னையில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமையில் தகுதி உடைய நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப அவர்கள் தெரிவித்து உள்ளார். வேலைவாய்ப்பு 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *