சபரிமலை மண்டல பூஜை 2023. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை தரிசனம் செய்வதற்கான விர்ச்சுவல் க்யூ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறையானது இன்று தொடங்கப்பட்டு உள்ளது. எப்படி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று பாக்கலாம் .
சபரிமலை மண்டல பூஜை 2023 ! ஆன்லைன் தரிசன விர்ச்சுவல் க்யூ முன்பதிவு இன்று தொடக்கம் !
சபரிமலை மண்டல பூஜை :
கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து படையெடுத்து வருவார். அதன் படி இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியில் இருந்து டிசம்பர் 26ம் தேதி வரையில் மண்டல பூஜை கோவிலில் நடைபெற இருக்கின்றது. இதற்கான தரிசன டிக்கெட் விர்ச்சுவல் க்யூ முன்பதிவானது இன்று தொடக்கி உள்ளது.
முன்பதிவு செய்யும் முறை :
ஆன்லைன் மூலமே மண்டல பூஜை தரிசனத்திற்க்கான விர்ச்சுவல் க்யூ டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1. இணையதளத்தில் saparimalaionline.org என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. சபரிமலை ஐயப்பன் கோவில் முகப்பு பக்கம் வரும்.
3. இதில் பக்தரின் பெயர் , பிறந்த தேதி , தெளிவான முகவரி , மொபைல் நம்பர் , மின்னஞ்சல் முகவரி , பாஸ் வேர்டு மற்றும் OTP டைப் செய்து Register செய்து கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.
4. பின்னர் மின்னஞ்சல் முகவரி , பாஸ்வேர்டு பதிவு செய்தால் முன்பதிவு செய்யும் பக்கத்திற்கு சென்று விடும்.
5. விர்ச்சுவல் க்யூ கிளிக் செய்து தரிசன தேதி மற்றும் நேரம் தேர்வு செய்ய வேண்டும்.
6. பின்னர் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு முன்பதிவு செய்யப்பட்ட தகவல் குறுந்செய்தியாக வரும்.
7. மின்னஞ்சல் முகவரிக்கு விர்ச்சுவல் க்யூ கூப்பன் வரும்.
8. இதனை பக்தர்கள் ப்ரிண்ட்அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை கோவிலுக்கு ஏறும் முன் பம்பாவில் இருக்கும் ஆஞ்சிநேயர் கோவிலில் காவல் துறையினர் ஆய்வு செய்வர். சபரிமலை மண்டல பூஜை 2023
குழந்தைகளுக்கு வித்யாரம்பம் இங்கு செய்து பாருங்கள் ! தமிழகத்தில் உள்ள முக்கிய சரஸ்வதி கோவில்கள் !
நேரடி முன்பதிவு :
ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால் நிலக்கல் பகுதியில் அமைந்திருக்கும் கவுண்டர்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு :
1. குறிப்பாக ஒரு கணக்கு எண் பயன்படுத்தி பத்து யாத்ரீகர்களின் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆனால் பெயர் மற்றும் மொபைல் எண் விவரங்கள் அனைத்தும் சரியாக கொடுக்க வேண்டும்.
2. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முன்பதிவு கட்டணம் என்பது கிடையாது. ஆனால் முன்பதிவு அவசியம்.
3. 6 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தரிசன முன்பதிவு என்பது தேவை இல்லை.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரத்தில் பக்தர்களின் கூட்டத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையானது பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனை கோவில் செல்லும் பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் இதன் மூலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பான பயணம் அமைவதர்க்கும் வாய்ப்புகள் உள்ளது.