108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் வேலை நிறுத்தம். ஜனவரி மாதம் 8ம் தேதியிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற 108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.
108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் வேலை நிறுத்தம் – சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க கூட்டம் :
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க கூட்டம் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டமானது மாநில தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை , தேனி , திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநில பொதுச் செயலாளர் , மண்டல செயலாளர் கலந்து கொண்டனர்.
தொடர் வேலை நிறுத்தம் :
இக்கூட்டத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 8ம் தேதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்பட்டது.
கோரிக்கைகள் :
1. சட்ட படியாக 8 மணி நேரம் தான் பணி செய்ய வேண்டும். ஆனால் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணி செய்கின்றனர். இதனை எதிர்த்து தினமும் 8 மணி நேரம் வேலை வழங்க வேண்டும்.
2. தமிழகம் முழுவதும் ஆள் பற்றாக்குறை இருக்கின்றது என்று ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் இயங்க வேண்டும்.
வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை ! எப்படி விண்ணப்பிக்கலாம்!
3. தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்கத்தோடு பணி நீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஜனவரி 8 முதல் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது மக்களுக்கு தான் பல இடையூறுகள் ஏற்படும்.