" டைம் அவுட் " ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ்" டைம் அவுட் " ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ்

 ” டைம் அவுட் ” ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ். பேட்டிங் செய்ய கிரிக்கெட் மைதானத்திற்கு தாமதமாக வந்த மேத்யூஸ் நடுவரால் டைம் அவுட் செய்யப்பட்டு உள்ளார். சர்வதேச போட்டியில் தாமதமாக வந்தவருக்கு அவுட் கொடுப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

” டைம் அவுட் ” ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ் ! இலங்கை அணிக்கு அடுத்தடுத்த அடியா ! 

" டைம் அவுட் " ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ்

இலங்கை & வங்க தேசம் :

  உலகக்கோப்பை கிரிக்கெட் 2023ம் தொடரில் இலங்கை அணி வங்க தேசம் கிரிக்கெட் அணியுடன் விளையாடி வருகின்றது. டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லீ மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகின்றது. வங்கதேசம் அணி உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறி விட்டது. 

JOIN SKSPREAD WHATSAPP

  இலங்கை அணி கடந்த போட்டியில் இந்திய அணியுடன் விளையாடியதில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இன்று நடக்க இருக்கும் போட்டியில் இரண்டு அணிகள் மீதான எதிர்பார்ப்புக்கு சற்று அதிகமாகவே இருந்தது. இப்போட்டியில் வங்க தேசம் அணி டாஸ்க் வென்றது. இதனால் இந்த அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. எனவே இலங்கை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

MCC விதிமுறை :

  மைதானத்தில் பேட்டின் செய்த நபர் ஆட்டம் இழந்தால் அடுத்து விளையாட இருக்கும் நபர் அடுத்த மூன்று நிமிடங்களுக்குள் மைதானத்திற்குள் வர வேண்டும். இல்லையென்றால் அந்த நபர் நடுவரால் ” டைம் அவுட் ” செய்யப்படுவார். 

நடந்தது என்ன :

  இன்றைய போட்டியில் 24வது சமரவிக்கிரமா போட்டியில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் போட்டியில் பேட்டிங் செய்ய களம் இறங்க வேண்டும். ஆனால் திடீரென்று இவரின் ஹெல்மெட்டில் பிரச்சனை வந்துள்ளது. இதனால் தன் அணியினரிடம் வேறு ஹெல்மெட் கேட்டு நின்றுள்ளார். 

நாளை மின்தடை பகுதிகள் ( 07.11.2023 ) ! மொபைல் , வாட்ச் , பவர் பேங்க் சர்ச் போட்டுகோங்க ! 

  அணியின் வீரர் மாற்று ஹெல்மெட் தருவதற்க்கு நேரம் ஆகி உள்ளது. இந்த நேரத்தில் வங்கதேச அணியின் வீரரும் பந்து வீசுவதற்கு காத்துக்கொண்டும் இருந்துள்ளார். வீரர் களத்திற்கு வராததால் வங்கதேசம் அணி பந்து விசுவதற்க்கும் தாமதம் ஆகி உள்ளது. வங்கதேசம் கிரிக்கெட் அணி வீரர்கள் டைம் அவுட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

தடுமாற்றத்தில் இலங்கை அணி :

  மைதானத்திற்குள் வர மேத்யூஸ் மூன்று நிமிடத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டதால் நடுவரலால் ” டைம் அவுட் ” செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இலங்கை அணி வீரர்கள் நடுவரிடம் எடுத்து சொன்னாலும் கேட்கவில்லை. இலங்கை அணி வீரர் மேத்யூஸ் ஒரு பந்தை கூட அடிக்காமல் டைம் அவுட் ஆனதால் அணி தற்போது தடுமாற்றத்தில் விளையாடி வருகின்றது.

புதிய மோசமான சாதனை :

  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் டைம் அவுட் செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இத்தகைய மோசமான சாதனையை மேத்யூஸ் செய்துள்ளார். 

கடந்த போட்டியில் இலங்கை அணி இந்திய அணியுடன் விளையாடி 55 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் மேத்யூஸ் டைம் அவுட் ஆனது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தினை அளித்துள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுமா அல்லது வங்கதேசம் அணி வெற்றி பெறுமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *