தருமபுரி DHS வேலைவாய்ப்பு 2023தருமபுரி DHS வேலைவாய்ப்பு 2023

  தருமபுரி DHS வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இயங்கி வருகின்றது. இதன் கீழ் இயங்கும் தருமபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தருமபுரி DHS வேலைவாய்ப்பு 2023 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தருமபுரி DHS வேலைவாய்ப்பு 2023

  தருமபுரி மாவட்ட DHSல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , கட்டணம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN SKSPREAD WHATSAPP

அமைப்பின் பெயர் :

  தருமபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் ( DHS – Dharmapuri District Health Society )காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. மாவட்ட தர ஆலோசகர் ( District Quality Consultant )

  2. பல் அறுவை சிகிச்சை நிபுணர் ( Dental Surgeon )

  3. பல் உதவியாளர் ( Dental Assistant )பணியிடங்கள் தருமபுரி மாவட்ட DHSல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. மாவட்ட தர ஆலோசகர் – 1  

  2. பல் அறுவை சிகிச்சை நிபுணர் – 2

  3. பல் உதவியாளர் – 1 என மொத்தம் நான்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வித்தகுதி :

  1. மாவட்ட தர ஆலோசகர் :

     பல் மருத்துவம் , ஆயுஷ் , நர்சிங் , சமூக அறிவியல் , மருத்துவமனை நிர்வாகம் , பொது சுகாதாரம் , சுகாதார மேலாண்மை போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கமுடியும் .

  2. பல் அறுவை சிகிச்சை நிபுணர் :

     BDS முடித்தவர்கள் பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

  3. பல் உதவியாளர் :

      அரசின் அனுமதியுடன் இயங்கும் கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பல் சுகாதார படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOB வங்கி வேலைவாய்ப்பு 2023 ! 66 காலிப்பணியிடங்கள் ! ரூ. 89,890 வரை மாத ஊதியம் ! 

அனுபவம் :

  1. பல் உதவியாளர் – பல் மருத்துவமனைகளில் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத்தகுதி :

  1. மாவட்ட தர ஆலோசகர் – 45 வயதிற்குள் 

  2. பல் அறுவை சிகிச்சை நிபுணர் – 35 வயதிற்குள் 

  3. பல் உதவியாளர் – 35 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். தருமபுரி DHS வேலைவாய்ப்பு 2023

சம்பளம் :

  1. மாவட்ட தர ஆலோசகர் – ரூ. 40,000

  2. பல் அறுவை சிகிச்சை நிபுணர் – ரூ. 34,000

  3. பல் உதவியாளர் – ரூ. 10,395 என தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  06.11.2023 முதல் 24.11.2023 மாலை 5 மணி வரையில் தருமபுரி மாவட்ட DHSல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் மேற்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு சரியான நேரத்திற்க்குள் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD
OFFICIAL APPLICATIONAPPLY NOW

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  நிர்வாக செயலாளர் ,

  சுகாதார பணிகள் துணை இயக்குநர் ,

  மாவட்ட சுகாதார சங்கம் ,

  சுகாதார பணிகள் துணை இயக்குநர் ,

  தருமபுரி – 636705 ,

  தமிழ்நாடு .

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்

  2. மின்னஞ்சல் முகவரி 

  3. 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 

  4. முதுகலை பட்ட மதிப்பெண் சான்றிதழ் 

  5. சாதி சான்றிதழ் 

  6. இருப்பிடச் சான்றிதழ் 

  7. ஆதார் கார்டு 

  8. வாக்காளர் அடையாள அட்டை 

  9. குடும்ப அட்டை 

10. அனுபவ சான்றிதழ் 

10. திருநங்கை / மாற்றுத்திறனாளிகள் / விதவை பெண் / கைவிடப்பட்ட பெண் / முன்னாள் ராணுவத்தினர்  சான்றிதழ் போன்றவைகளின் ஜெராக்ஸ் விண்ணப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு :

  1. உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

  2. விண்ணப்பபடிவம் முழுமையாக நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கும் முறை :

  தருமபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்படுவர். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *