SBI Recruitment Deputy Manager 2023. பாரத ஸ்டேட் வங்கி 1806ம் ஆண்டு முதல் இந்தியாவின் பொதுத்துறை வங்கியாக இயங்கி வருகின்றது. இந்தியாவில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி கிளைகளை SBI வங்கி கொண்டுள்ளது. மேலும் 62 ஆயிரத்திற்கும் அதிகமான ATMகளை கொண்டு உலக அளவில் இயங்கி வருகின்றது.
SBI Recruitment Deputy Manager 2023 ! இனியும் வெயிட் பண்ணாதீங்க விண்ணப்பியுங்கள் !
அதன்படி SBI வங்கியில் மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
நிறுவனத்தின் பெயர் :
SBI வங்கி ( State Bank of India )யில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. துணை மேலாளர் ( பாதுகாப்பு ) – Deputy Manager (Security)
2. மேலாளர் ( பாதுகாப்பு ) – Manager (Security) பணியிடங்கள் SBI வங்கியில் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
துணை மேலாளர் / மேலாளர் என மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் SBI வங்கி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அனுபவம் :
1. துணை மேலாளர் ( பாதுகாப்பு ) :
இந்திய ராணுவம் , இந்திய கடற்படை , விமானப்படையில் அதிகாரி பணியில் 5 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். அல்லது இந்திய காவல் துறையில் துணை தளபதி , அதிகாரி , உதவி கண்காணிப்பாளர் , துணை கண்காணிப்பாளர் , உதவி கமாண்டன்ட் , இந்திய ராணுவ படையில் 5 ஆண்டுகள் பணி அனுவபம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
2. மேலாளர் ( பாதுகாப்பு ) :
இந்திய ராணுவம் , இந்திய கடற்படை , விமானப்படையில் அதிகாரி பணியில் 10 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். இந்திய காவல் துறை , பாரா இராணுவப்படையின் துணை கண்காணிப்பாளர் , துணை மாண்டன்ட் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NIEPMD விரிவுரையாளர் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு !
வயதுத்தகுதி :
25 வயது முதல் 40 வயது வரையில் இருக்கும் நபர்களில் வங்கி பணிக்கு ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
1. துணை மேலாளர் ( பாதுகாப்பு ) – ரூ. 48,170 முதல்
2. மேலாளர் ( பாதுகாப்பு ) – ரூ. 63,840 முதல் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும். SBI Recruitment Deputy Manager 2023.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
07.11.2023 முதல் 27.11.2023 வரையில் SBI வங்கியில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விவ்ண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
துணை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. கையொப்பம்
3. Resume
4. பிறப்பு சான்றிதழ்
5. I’D சான்றிதழ்
6. சாதி சான்றிதழ்
7. கல்வி சான்றிதழ்
8. அனுபவ சான்றித
9. கடைசி மாத சம்பள விவரம்
10. NOC போன்றவைகள் விண்ணப்படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
வேலையிடம் :
SBI வங்கியில் இருக்கும் துணை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்ப்பித்தவர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் மூலமே தகுதியான துணை மேலாளர் மற்றும் மேலாளர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
முக்கிய குறிப்பு :
காலிப்பணியிடம் நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளது. நேர்காணல் அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு தான் வங்கியில் இருந்து அனுப்பப்படும். எனவே சரியான பயன்பாட்டில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை சமர்ப்பிக்க வேண்டும்.