நாமக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் தேசிய சுகாதார திட்டத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் இயங்கி வருகின்றது. இங்கு ஆலோசகர் , மருந்தாளர் மற்றும் உதவியாளர் போன்ற பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் தெளிவாக காணலாம்.
நாமக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
அமைப்பின் பெயர் :
நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ( District Health Society ) காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. ( District Quality Consultant )
2. ( Dental Surgeon )
3. குளிர்பதன இயக்கவியல் ( நோய்த் தடுப்பு )
4. Mid Level Health Provider
5. RBSK மருந்தாளர்
6. Health Inspector GR – 2 ( மக்களை தேடி மருத்துவம் )
7. ANM – UPHC
8. பல் உதவியாளர் ( Dental Assistant )
9. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் ( Data Entry Operator )
10. நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் ( Programme Cum Administrative Assistant )
11. பழங்குடியினர் நல ஆலோசகர் ( Tribal Welfare Counselor ) போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. மாவட்ட தர ஆலோசகர் – 1
2. பல் அறுவைசிகிச்சை நிபுணர் – 2
3. குளிர்பதன இயக்கவியல் – 1
4. Mid Level Health Provider – 4
5. RBSK மருந்தாளர் – 1
6. Health Inspector GR – 2 ( மக்களை தேடி மருத்துவம் ) – 7
7. ANM – UPHC – 4
8. பல் உதவியாளர் – 4
9. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 1
10. நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் – 1
11. பழங்குடியினர் நல ஆலோசகர் – 1 என மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் நாமக்கல் மாவட்ட DHSல் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
1.மாவட்ட தர ஆலோசகர் :
பல் / ஆயுஷ் / நர்சிங் / சமூக அறிவியல் / வாழ்க்கை அறிவியல் டிகிரி முடித்து மருத்துவமனை நிர்வாகம் , பொது சுகாதாரம் , சுகாதர மேலாண்மை போன்றவைகளில் இரண்டு வருட பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. பல் அறுவை சிகிச்சை நிபுணர் :
BDS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. குளிர் பதன இயக்கவியல் :
மெக்கானிக்கல் மற்றும் ஏர் கண்டிஷனரிங் துறையில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. Mid Level Health Provider :
GNM , B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
5. RBSK மருந்தாளர் :
மருந்தகம் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
6. Health Inspector GR – 2 ( மக்களை தேடி மருத்துவம் ) :
1. அறிவியல் படப்பிரிவில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
2. பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை படமொழியாக படித்திருக்க வேண்டும்.
3. பல்நோக்கு சுகாதார பணியாளர் , சுகாதார ஆய்வாளர் , சானிடரி இன்ஸ்பெக்டர் இரண்டு ஆண்டு படிப்பினை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல் ! ஷூட்டிங் முடிந்தது !
7. ANM – UPHC :
பல்நோக்கு சுகாதார பணியாளர் , துணை செவிலியர் படித்து இரண்டு வருடம் பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
8. பல் உதவியாளர் :
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பல் அறுவை சிகிச்சை நிபுணருக்கு உதவிய அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
9. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் :
பத்து மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் கணினியில் 1 வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
10. நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் :
ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் MS Office தெரிந்திருத்தல் வேண்டும்.
11. பழங்குடியினர் நல ஆலோசகர் :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பழங்குடியினர் மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
1. District Quality Consultant – ரூ. 40,000
2. பல் அறுவை சிகிச்சை நிபுணர் – ரூ. 34,000
3. குளிர்பதன இயக்கவியல் – ரூ. 20,000
4. Mid Level Health Provider – ரூ. 18,000
5. RBSK மருந்தாளர் – ரூ. 15,000
6. Health Inspector GR – 2 ( மக்களை தேடி மருத்துவம் ) – ரூ. 14,000
7. ANM – UPHC – ரூ. 14,000
8. பல் உதவியாளர் – ரூ. 13,800
9. டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் – 13,500
10. நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் – ரூ. 12,000
11. பழங்குடியினர் நல ஆலோசகர் – ரூ. 10,500 வரை தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும். நாமக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
27.11.2023ம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் , மின்னஞ்சல் அல்லது அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
துணை இயக்குநர் சுகாதார பணிகள் ,
நிர்வாக செயலாளர் ,
நாமக்கல் மாவட்ட DHS ,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,
நாமக்கல் – 637 003 ,
தமிழ்நாடு .
தேர்ந்தெடுக்கும் முறை :
நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.