உலக நாடுகளில் தீபாவளி 2023. தீபாவளி இந்து மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் இருக்கும் இந்தியர்களால் கொண்டபப்டுகின்றது. அதன்படி தீபாவளி பண்டிகை உலக அளவில் இருக்கும் இந்தியர்களால் எப்படி கொண்டாடப்படுகின்றது என்பதை காணலாம்.
உலக நாடுகளில் தீபாவளி 2023 – எப்படி கொண்டாடுகின்றார்கள் தெரியுமா !
தீபாவளி 2023 :
தீபாவளி நாம் கொண்டுவதற்கு பல புராணக்கதைகள் இருக்கின்றது. மஹாபாரதத்தில் கொடூரன் நரகாசுரன் அழிந்த தினம் தீபாவளி பண்டிகையாக மக்கள் கொண்டாடினர் என கூறப்படுகின்றது. இராமாயணத்தில் இராமன் இராவணனை அழித்து விட்டு சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்கு வந்த நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடினர் என்றும் கூறப்படுகின்றது.
மக்கள் வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி வெளிச்சம் உதிக்கும் நன்னாளை மக்கள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடி உள்ளனர். அதன் படி தீபாவளி இந்த ஆண்டில் 12.11.2023 அன்று இந்து சமய மக்களால் கொண்டாடப்படுகின்றது.
தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாட்டம் :
தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளி பண்டிகை நாளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்வர். பின்னர் கடவுள் முன் வைத்திருக்கும் மஞ்சள் பூசப்பட்ட புது உடைகளை உடுத்திக் கொள்வர். பூஜை அறையில் தீபம் ஏற்றி கடவுள் வழிபாடு செய்வர்.
பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்புகள் போன்ற பலகாரங்களை பகிர்ந்து கொள்வர். காலை முதல் இரவு நேரங்களில் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பீஜி தீவு & தீபாவளி கொண்டாட்டம் :
இந்தியர்கள் உலகம் முழுதும் வாழ்ந்து வருகின்றனர். அதில் இந்தியர்கள் அதிகளவில் வாழும் தீவுகளில் ஒன்றாக இருப்பது பீஜி தீவு. இங்கிருக்கும் மக்கள் தங்களின் வீடுகளை முழுமையாக அலங்காரம் செய்கின்றனர்.
அருகில் இருக்கும் நண்பர்களுக்கு இனிப்புகள் போன்றவைகளையும் பரிசுகளையும் வழங்குகின்றனர். முக்கியமாக பீஜி தீவுகளில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி இருப்பதால் பட்டாசுகளையும் வெடித்து தீபாவளி கொண்டாடி மகிழ்கின்றனர்.
44வது வார தமிழ் சீரியல் TRP 2023 ! எதிர்நீச்சலுக்கு வந்த பரிதாப நிலை !
கனடா & தீபாவளி :
கனடா நாட்டில் அதிகளவில் இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் மக்கள் வசிக்கின்றார்கள். எனவே இந்நாட்டில் அதிகாரப்பூர்வமான 3வது மொழியாக பஞ்சாபி இருப்பது பெருமையான ஒன்றாகும். இங்கு தீபாவளி பண்டிகையானது தசரா விழாவினை போன்று பெரும் ஆட்டம் பட்டமாய் கொண்டப்படுகின்றது.
மலேசியா நாட்டில் தீபாவளி கொண்டாட்டம் :
மலேசியா நாட்டில் தீபாவளி பண்டிகையானது ” ஹரி தீபாவளி ” என்று கொண்டாடப்படுகின்றது. மலேசியா நாட்டில் அதிகளவு தமிழர்கள் இருக்கின்றார்கள். எனவே தமிழ்நாட்டில் தீபாவளி எவ்வாறு கொண்டப்படுகின்றதோ அதே போல் மலேசியாவிலும் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது.
அதிகாலை எண்ணெய் குளியலில் அன்றைய தினம் ஆரம்பிக்கின்றது. இங்கிருக்கும் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் இன்றைய தினத்தில் நடைபெறுகின்றது. இங்கு மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொள்கின்றனர். முக்கியமாக மலேசியா நாட்டில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது.
இந்தோனேசியா :
இந்தோனேசியாவில் தீபாவளி அன்று மக்கள் இரவு நேரங்களில் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்கின்றார்கள். இங்கு சிறப்பாக இருப்பது பட்டாசுகளை வெடிப்பது தான். இரவு நேரங்களில் வித விதமான வான வேடிக்கைகள் நடத்தப்படுகின்றது.
நேபாளம் :
இந்து சமய மக்கள் அதிகளவில் வாழும் முக்கிய நாடு நேபாளம். இன்னாளில் சிறப்பாக மக்கள் லட்சுமி பூஜை செய்து வழிபடுவர். நேபாள நாட்டில் ‘ தசைன் ‘ என்னும் பண்டிகைகளுக்கு பின்னர் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி இருக்கின்றது.
முடிவுக்கு வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இறுதி கதை இது தான் !
இலங்கை :
இலங்கை மக்கள் தீபாவளி தினங்களில் புது விதமான இனிப்பு வகைகளை தயாரித்து பகிர்ந்து கொடுத்து பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
சிங்கப்பூர் தீபாவளி :
சிங்கப்பூர் மக்களால் தசராவிற்கு அடுத்து பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் விழா தீபாவளி. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா என்னும் பகுதியில் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே தீபாவளி கொண்டாட தொடங்குகின்றனர்.
சிறப்பாக அனைத்து வீடுகளும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். சிங்கப்பூரின் தீபாவளி கொண்டாட்டத்தில் முக்கியமான ஒன்று ” தீபாவளி பஜார் ” ஆகும்.
மொரீசியஸ் :
மொரீசியஸ் நாடுகளில் வாழும் மக்களில் 50% மக்கள் இந்துக்கள். எனவே இப்பகுதியில் தீபாவளி பண்டிகை குடும்ப நிகழ்வுகளை போல் மக்கள் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். உலக நாடுகளில் தீபாவளி 2023
இங்கிலாந்து :
இங்கிலாந்து நாட்டில் இருக்கும் பர்மிங்ஹாம் மற்றும் லிசேஸ்வர் பகுதிகளில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே இப்பகுதிகளில் இருக்கும் மக்களால் தீபாவளி பண்டிகை மிகப்பிரம்மாண்டமாக கொண்டப்படுகின்றது.
தீபாவளி பண்டிகையை இந்தியர்கள் மட்டும் இந்தியாவில் மட்டும் கொண்டாடுவதை கடந்து உலகின் பல பகுதிகளில் தீபாவளி கொண்டப்படுகின்றது. மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாட்களாகவும் உறவுகளை புதுப்பித்துக் கொள்ளவும் இப்பண்டிகைகள் மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது.