மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம்மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம். மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகர்கோவில். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. அழகர் கோவிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நவம்பர் 23 அன்று நடக்கிறது. அதற்கான யாகசாலை பூஜை சற்றுமுன் தொடங்கியது.

மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம்

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கள்ளழகர் கோவில். கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் இப்பொழுது நடத்தப்படுகிறது. அதற்காக ராஜகோபுரம் 2 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்தது. புது வண்ணங்களும் பூசப்பட்டன.

JOIN WHATSAPP CHANNEL (MADURAI UPDATES)

மதுரையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் திருவிழாக்கள் முக்கியமானவை. அதிலும் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் உலகப்புகழ் பெற்றது. அழகர் ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்படுவார். தற்போது அந்தக் கோவிலின் ராஜகோபர கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தீர்த்த குடங்கள் எடுத்துச் செல்ல மூங்கில் கட்டும் பணியும் முடிவடைந்துள்ளது. கடந்த 3ஆம் தேதி அன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இன்று யாகசாலை பூஜை தொடங்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 4 இலவச பயிற்சி ! YOUTUBE ஆன்லைன் வகுப்பு !

இந்த கோபுரத்தின் அளவு 120 அடி ஆகும். கோபுரம் ஏழு நிலைகளுடன் காணப்படுகிறது. இந்த கோபுரத்துடன் 18-ம் படி கருப்பசாமி கோவில் இணைந்துள்ளது.யாகசாலை பூஜை முடிந்த பின் வரும் 23ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் கும்பாபிஷேகம்.

நாளை மறு நாள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக சாமி தரிசனம் செய்யுங்கள்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *