தமிழ்நாட்டில் பிளாட் பதிவுக்கான புதிய விதிகள். தற்போது தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு ஆவணங்களாக பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. அதாவது அடிநிலம் பொருத்து பிரிபடாத பாகத்திற்கு கிரையமாக ஒரு ஆவணமாகவும் கட்டடப் பகுதியை ஒரு ஆவணமாகவும் பதிவு செய்யப்படுகின்றன. வரும் டிசம்பர் முதல் ஒரே ஆவணமாக பதிவு செய்யும் முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளாட் பதிவுக்கான புதிய விதிகள் ! டிசம்பர் 2023 முதல் நடைமுறை !
பழைய முறை
அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யும் போது அடி நிலம் மற்றும் கட்டடம் சேர்ந்த பகுதிக்கு ஒரே விலையை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கட்டடங்களை விற்பனை ஆவணமாக பதிவு செய்யாமல் கட்டுமான உடன்படிக்கையை ஆவணமாக பதிவு செய்வது தமிழ்நாட்டில் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரண்டும் வெவ்வேறு ஆவணமாக பதிவு செய்யப்படுகிறது. விற்பனை ஆவணத்திற்கு 7% முத்திரைத்தாளும் 2% பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும். உடன்படிக்கை ஆவணத்திற்கு 1% முத்திரைத்தாலும் 3% பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும்.
மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் முறை
தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் வேறு நடைமுறை உள்ளது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்து கட்டடம் மற்றும் அடி நிலம் இணைந்த ஒரு மொத்த மதிப்பு அளவிடப்படுகிறது. இந்த மொத்த மதிப்பை கொண்டு ஒரே பத்திரமாக பதியப்படுகிறது.
தமிழ்நாடடில் மாற்றம்
மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் இதே முறையை தமிழ்நாட்டில் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 27.07.2023, 07.09.2023 மற்றும் 12.09.2023 ஆகிய தேதிகளில் அவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதனை ரியல் எஸ்டேட் நிறுவன அமைப்புகளும் ஒப்புக்கொண்டன. ஆனால் அதற்கான முத்திரைத்தாளின் மதிப்பை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
நாளை மின்தடை பகுதிகள் (22.11.2023) ! புதன்கிழமை பவர் கட் இருக்கு மக்களே உஷார் !
தமிழ்நாட்டில் புதிய முறை
எனவே இது நாள் வரை இரு ஆவணமாக பதியப்பட்டு வந்தது. வரும் டிசம்பர் முதல் இது ஒரே ஆவணமாக பதியப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரே ஆவணம் என்பது அடித்தளம் மற்றும் கட்டிடத்தின் கூட்டு மதிப்பாகும். குறிப்பிட்ட மதிப்பின் வரை முத்திரைத்தாளின் விலையும் குறைக்கப்பட உள்ளது. 50 லட்சம் வரை உள்ள குடியிருப்புக்கு தற்போது ஏழு சதவீதம் உள்ளது. இதை 4% குறைக்கலாம். 50 லட்சம் முதல் 3 கோடி வரை 7இல் இருந்து ஐந்தாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சத்திற்கு வீடு வாங்கும் போது விற்பனை கிரையமாக 4% மற்றும் பதிவு கட்டணமாக 2% சேர்த்து 6% செலுத்தினால் போதும்.
யாருக்கு பொருந்தும்
இந்த வகையானது விரிபடாத பாகம் அணியுடன் மதிப்பிடப்படும் அடுக்குமாடி குடியிருப்பதற்கு மட்டுமே வழங்கப்படும். இது புதிய அடுக்குமாடி குடியிருப்புக்கு மட்டும் பொருந்தும். மறு விற்பனை செய்யப்படும் பழைய கட்டிடத்திற்கு பொருந்தாது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் இனி கட்டுமான ஒப்பந்த ஆவணமாக இல்லாமல் விற்பனை கிரயமாக பதிந்து தங்களது குடியிருப்பை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
எப்பொழுது முதல்
இந்த நடைமுறையானது 01.12. 2023 முதல் அமலுக்கு வருகிறது. எனவே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவோர் கவனமாக பதிந்து கொள்ளலாம். இப்பொழுது அட்வான்ஸ் கொடுத்தவர்களும் டிசம்பர் மாதம் பதிந்து கொள்வதால் புதிய சலுகை வரும்.