TNPSC வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சற்று முன் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. உதவி வேளாண்மையாளர் அதிகாரி மற்றும் உதவி தோட்டக்கலை அதிகாரி ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்க்கான கல்வி, வயது, சம்பளம், விண்ணப்பக்கட்டணம், மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை காணலாம்.
TNPSC வேலைவாய்ப்பு 2023 ! AAO மற்றும் AHO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) AAO மற்றும் AHO காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
AAO – உதவி வேளாண்மையாளர் அதிகாரி
AHO – உதவி தோட்டக்கலை அதிகாரி
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
உதவி வேளாண்மையாளர் அதிகாரி – 84
உதவி தோட்டக்கலை அதிகாரி – 179
மொத்தம் 263 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
AAO – தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட வேளாண்மை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
AHO – தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை துறையில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
குறைந்த பட்சமாக 18 வயதும் அதிக பட்சமாக 32 வயதும் இருக்க வேண்டும். அதில் விலக்கு உள்ள பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
அரசு வாகன ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2023 ! 62000 வரை சம்பளம் !
சம்பளம் :
AAO – உதவி வேளாண்மையாளர் அதிகாரி – 20,600 முதல் 75,900 வரை.
AHO – உதவி தோட்டக்கலை அதிகாரி – 20,600 முதல் 75,900 வரை.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 25.11.2023 முதல் 24.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
AAO மற்றும் AHO பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரபூர்வ விண்ணப்பம் | விண்ணப்பிக்க |
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க – ரூ .150
தேர்வு கட்டணம் – ரூ . 100
விலக்கு உள்ள நபர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ள AAO மற்றும் AHO காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெறும் நபர்கள் மட்டும் அடுத்த நிலைக்கு செல்வார்கள். பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 என ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அதில் தேர்ச்சி பெரும் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த அனைத்தும் ஒரிஜினல் மற்றும் நகல் தயார் செய்துகொள்ளுங்கள். அணைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்க படுவீர்கள்.
அதில் தேர்வு ஆனவர்கள் நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள் :
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.12.2023
- திருத்தம் செய்வதற்கான நாள் – 29.12.2023 முதல் 31.12.2023
- கணினி வழி தேர்வு PAER 1 – 07.02.2024 காலை 9.30 முதல் 12.30 வரை.
- PAER 2 – 07.02.2024 மதியம் 02.30 முதல் 5.30 வரை.