Home » வேலைவாய்ப்பு » மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.12.2023 நடைபெறுகிறது !

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 02.12.2023 நடைபெறுகிறது !

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு. டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 02.12.2023 அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ய்பு முகாம் நடைபெற உள்ளது. யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் எங்கு நடக்கும் என்பதை காணலாம்.

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை இல்லாதவர்களுக்கு தனியார் துறையில் வேலை அமர்த்தும் பொருட்டு இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழா 02.12.2023 (சனிக்கிழமை) அன்று ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கணினிதுறை, சேவைதுறை, தொழில்துறை, ஆட்டோமொபைல்துறை, விற்பனைத்துறை, போன்ற 150கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறைகள் சார்ந்த நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை தேர்ந்த்தெடுக்க உள்ளனர். இதில் 8ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை கலந்து கொள்ளலாம்.

IDBI வங்கி வேலைவாய்ப்பு 2023 ! 2100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

வேலைவாய்ப்பு முகாமில் டிரைவர் முதல் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, இ.டீ.ஐ , செவிலியர், அக்ரி, ஆசிரியர்கள், ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்தவர்கள் பங்கு பெறலாம். இளநிலை முதல் முதுநிலை வரை அணைத்து வகையான பட்டம் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். 18 வயது முதல் 40 வயது வரை வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய விவரத்துடன் கலந்து கொள்ளவும். கலந்துகொள்ளும் அனைவரும் தங்கள் கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டுவர வேண்டும்.

மேலும் இந்த முகாம் குறித்த சந்தேகங்களுக்கு 8807204332 / 04151-295422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடுபவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். மேலும் வேலைவாய்ப்பு செய்திகளுக்கு உங்கள் வாட்ஸாப்ப் சானலில் இணைந்திடுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top