தற்போது எல்லாரும் புது வருடத்தை கொண்டாட தயாராக இருந்த நிலையில், அனைவரையும் சோகத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற சம்பவம் என்றால் அது கேப்டன் விஜயகாந்தின் மறைவு தான். சினிமாவில் சும்மா கம்பீரமாக இருந்த மனிதன் தற்போது பூத உடலாக காட்சியளிப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பல பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் தற்போது கேப்டனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் எனது நெருங்கிய நண்பர் இறந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை பார்க்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. இப்பொழுது இந்த நிலைமையில் அவரை நான் பார்க்க கூடாது என்று கடவுள் நினைக்கிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் தற்போது நான் துபாயில் இருக்கிறேன். இப்பொழுது கண் கலங்குவதை விட வேறு மொழிகள் இல்லை என்று வருத்தத்துடன் ஆடியோ கொடுத்துள்ளார். தற்போது அந்த ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.