சென்னையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் தினசரி அல்லோலப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க போக்குவரத்து துறை பல நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் கடும் போக்குவரது நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட ரூ 393 கோடிசெலவில் நவீன தொழில்நுட்பத்துடன் பேருந்து நிலையத்தை தயார் செய்து வருகின்றனர்.
மேலும் அந்த பேருந்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்காக அப்பகுதியில் இருக்கும் திமுகவினர் பலத்த வரவேற்பு அளித்தனர். இதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போடா வெளிய.., தளபதி விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்த மர்ம நபர்.., துக்க வீட்டில் என்ன நடந்தது?