தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதி பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கனமழை நின்ற போதிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிகளுக்கு ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த சமயத்தில் மாணவ மாணவியர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களே குடை முக்கியம்.., தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை.., வானிலை மையம் தகவல்!!
இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிறுத்தி வைக்கப்பட்ட 11, 12ம் வகுப்பு தேர்வுகள் ஜனவரி 4ம் தேதி முதல் 11ம் தேதி வரையும், அதே போல் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.