தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இருந்து வந்தவர் தான் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கிய ஜோதிகா, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது சூர்யா மீது அவர் வைத்த காதல் கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஜோதிகாவை நடிக்க சூர்யா சம்மதித்துள்ளார்.
தற்போது தமிழில் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் ஜோதிகாவுக்கு பிரபல ஹீரோயின் நக்மா தான் அக்கா என்று தெரியும். ஆனால் அவருடைய தங்கை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அட ஆமாங்க., ஜோதிகாவுக்கு ரோஷினி என்ற தங்கை இருக்கிறார். இவரும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நக்மா, ஜோதிகா அளவுக்கு பிரபலமாகவில்லை. இந்நிலையில் ரோஷினி உடைய லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சூர்யாவுக்கு இப்படி ஒரு மச்சினிச்சியா? என்று நெட்டிசன்கள் வாயை பிளந்து வருகின்றனர்.
வெள்ளத்தால் தத்தளிக்கும் நெல்லை மாவட்டம்.., உதவிக்கரம் நீட்டிய தளபதி விஜய் – வெளியான தகவல்!!