தற்போது 2023 ஆம் ஆண்டு முடிவடைய போகும் நிலையில் இந்த ஆண்டு வெளியான பல தமிழ் திரைப்படங்களில்,திரையரங்குகளிலும் மற்றும் ஸ்ட்ரீமிங்கிலும் வெளிவந்து அதிக வசூல் சாதனை மற்றும் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் விமர்சன ரீதியாக மக்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படங்களின் தகவல்கள் பற்றிய முழு விவரம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லியோ :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் லியோ. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரத்தில் ஓட்டல் நடத்தும் குடும்பத் தலைவனாக இருக்கும் பார்த்திபன் என்ற விஜய்யை சில வில்லன்கள் தேடி வருகின்றனர். மேலும் அவரை லியோ என்று துரத்துகிறார்கள். கடைசியில் உண்மையான லியோ யார் என்பது தான் மீதி கதை .
வகை: ஆக்ஷன், த்ரில்லர்
IMDB மதிப்பீடு: 7.5
நடிகர்கள்: விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா
இயக்குனர்: லோகேஷ் கனகராஜ்
வசூல் : 650 கோடி
ஜெயிலர் :
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயின்டாக இருந்தது என்னவென்றால் அது கண்டிப்பாக அனிருத் மியூசிக் தான்.
வகை: ஆக்சன் , க்ரைம்
IMDB மதிப்பீடு: 7.1
நடிகர்கள்: ரஜினிகாந்த், விநாயகன், வசந்த் ரவி
இயக்குனர்: நெல்சன் திலீப்குமார்
வசூல்: 600 கோடி
சித்தா :
சித்தார்த் ஹீரோவாக நடித்த இந்த படம் முழுக்க முழுக்க அண்ணன் மகள் மீது தம்பி வைத்துள்ள பாசமும், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது.
வகை: திரில்லர், நாடகம்
IMDB மதிப்பீடு: 8.4
நடிகர்கள்: சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர்
இயக்குனர்: எஸ்.யு. அருன் குமார்
போர் தொழில்:
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திலும் வராத கதைக்களத்தை அமைத்து, ஒவ்வொரு காட்சிகளிலும் படபடப்பை ஏற்பத்திய படம்.
வகை: த்ரில்லர், ஆக்சன்
IMDB மதிப்பீடு: 8
நடிகர்கள்: ஆர்.சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல்
இயக்குனர்: விக்னேஷ் ராஜா
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:
காட்டு பகுதியில் வாழும் அடிதர மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை போக்குவதற்கு ரவுடியான ராகவா லாரன்ஸ் செல்கிறார். அவர் காப்பாற்றினாரா இல்லையா? அது தான் படத்தின் மீதி கதை.
வகை: ஆக்சன், நகைச்சுவை
IMDB மதிப்பீடு: 8.4
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, ஷைன் டாம் சாக்கோ
இயக்குனர்: கார்த்திக் சுப்புராஜ்.
குட் நைட் :
அன்றாட சமூகத்தில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் குறட்டையால் வாழ்க்கையில் எந்தவித பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பது தான் கதை.
வகை: நகைச்சுவை, காதல்
IMDB மதிப்பீடு: 7.7
நடிகர்கள்: மணிகண்டன் கே, மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக்
இயக்குனர்: விநாயக் சந்திரசேகர்