தற்போதைய காலகட்டத்தில் மக்களை நூதன முறையில் பணமோசடி செய்து வருகின்றனர். குறிப்பாக சோசியல் மீடியாவில் வரும் பொய்யான அறிக்கைகளை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் “அகில இந்திய கருத்தரிப்பு வேலை வாய்ப்பு’ என்ற விளம்பரத்தின் மூலம் மக்களிடம் பணத்தை ஏமாற்றி வந்த கும்பலை சமீபத்தில் போலீசார் கைது செய்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, இந்த கும்பல் அந்த விளம்பரத்தை பார்த்து அவர்களை அழைக்கும் மக்களிடம் பதிவு செய்ய முதலில் 799 ரூபாய் டெபாசிட் செய்ய சொல்வார்களாம்.
அதன் பின்னர் சில பெண்கள் புகைப்படத்தை அனுப்பி, இவர்களில் யாரை கர்பமாக்க விரும்புகிறீர்கள் என்று தேர்ந்தெடுக்க சொல்வார்களாம். இதையடுத்து மக்கள் தேர்ந்தெடுக்கும் பெண்களின் மதிப்பை குறித்து ரூ 5,000 முதல் ரூ 20,000 வரை டெபாசிட் செய்த பின், அந்த பெண் கர்ப்பமானால் 13 லட்சம் தருவதாகவும், அப்படி அவர் கர்ப்பம் ஆகவில்லை என்றால் 5 லட்சம் தருவதாக கூறி மோசடி செய்து வந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.