உலக நாடுகளை கடந்த சில நாடுகளாக உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் தற்போது கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம், தெலங்கானா, கேரள மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 490 பேருக்கு கொரோன பரிசோதனை செய்ததில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை சேர்ந்த 10 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேருக்கும், கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு நபருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.