தேர்தல் 2024தேர்தல் 2024

தேர்தல் 2024. இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என கூறப்படும் அளவிற்கு குறைந்தது 64 நாடுகளில் தேசிய தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. உலக மக்கள் தொகையில் சுமார் 49% மக்கள் தொகை இந்த ஆண்டு வாக்களிப்பார்கள் என் எதிர்பார்க்கப்படுகிறது.

JOIN WHATSAPP CLICK HERE

உலக வாழ்வில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக உள்ள தேர்தல் இந்த ஆண்டில் இன்னும் சிறப்பாக விளங்க உள்ளது. இந்த ஆண்டின் தேர்தல்களே வரப்போகும் பல ஆண்டுகளின் விளைவாக அமையும்.

2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் எந்த எந்த நாட்டில், என்ன என்ன தேதிகளில் நடக்கஉள்ளதென விரிவாக காணலாம்.

தேர்தல் 2024

உலகத்திலேயே அதிக மக்கள் தொகையான 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல்கள் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 முதல் 9 தேதி வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளன.

உலகத்தின் முதன்மையான நாடான அமெரிக்கா நாட்டில் அமெரிக்காவின் ஒன்றிணைக்கப்பட்ட மாநிலங்கள் பிரசிடென்சி, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தேர்தல் 2024ஆம் ஆண்டு 5 நவம்பர் அன்று தேர்தல் நடக்கிறது.

இந்தோனேஷியா நாட்டின் ஜனாதிபதி பதவிக்கான பிராந்திய பிரதிநிதி கவுன்சில், பிரதிநிதிகள் சபை தேர்தல் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று நடக்கவுள்ளது.

இந்திய நாட்டின் அருகில் அமைந்துள்ள பாக்கிஸ்தான் நாட்டில் தேசிய சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டின் பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று நாடாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

பங்களாதேஷ் நாடும் இந்தியாவின் அருகில் அமைந்துள்ள நாடாகும்.இங்கு தேசிய பாராளுமன்ற தேர்தல் வருகிற ஜனவரி 7ஆம் தேதி நடக்கவுள்ளது.

முதல நிலநடுக்கம்.., இப்ப இது வேறயா? ஜப்பானுக்கு விழுந்த அடுத்த அடி.., சோகத்தில் தத்தளிக்கும் மக்கள்!!

ரஷ்யா நாட்டின் ரஷ்ய கூட்டமைப்பு ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் 2024ஆம் ஆண்டு மார்ச் மதம் 15 -17 தேதிகளில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்ஸிகோ நாட்டில் ஜனாதிபதி பதவி, செனட், பிரதிநிதிகள் சபை தேர்தல் ஜூன் மாதம் 2ஆம் தேதி நடக்கவுள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டின் தேசிய சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டின் மே முதல் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியா நாட்டின் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

அல்ஜீரியா நாட்டில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் 2024ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டில் தலைவர் பதவி தேர்தல் வருகிற மார்ச் மதம் 31ஆம் தேதி நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் 2024

இதுபோன்று உலகின் பல பெரிய நாடுகளில் 2024ஆம் ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இதுமட்டுமின்றி பல சிறிய நாடுகளும் 2024ஆம் ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளன.எனவே, 2024ஆம் ஆண்டு கண்டிப்பாக உலகின் தேர்தல் ஆண்டாகவே திகழப்படும்.

By Uma