உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதம் எல்லா மாநிலங்களில் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து ஐயப்பனை நாடி ஓடி வருகின்றனர். எனவே இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக பக்தர்களின் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஐயப்பன் கோவிலும் வருடந்தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். இதில் எக்கசக்க பக்தர்கள் கலந்து கொள்ள கூட்டம் ஆர்ப்பரிக்கும் நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சபரிமலை பக்தர்களே
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற ஜனவரி 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க பட்ட நிலையில் வருகிற 14,15ம் தேதி மட்டும் குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.