கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உரிமை தொகை கோரி மேல்முறையீடு செய்த விண்ணப்ப தாரர்களில் தகுதியானர்வர்களுக்கு இம்மாதம் முதல் அவர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் பணம் வரவு வைக்க படஇருக்கிறது.
கலைஞர் உரிமை தொகை மேல்முறையீடு
உரிமைத்தொகை திட்டமானது கடந்த ஆண்டு செப்.15 ந் தேதி நடைமுறைக்கு வந்தது. தி,மு,க தந்த தேர்தல் வாக்குறுதி திட்டத்தில் இந்த மகளிர் உரிமை தொகை திட்டமானது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனாலும் தி.மு.க ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகியும் இந்த திட்டம் செயல்படாமல் இருந்தது.
பின்னர் இந்த திட்டம் குறித்த நடவடிக்கைகள் கடந்த வருடம் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு இறுதியாக அறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்.15 ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தனர். பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட தகுதியான மகளிர் தேர்தெடுக்கும் பணி தொடங்கியது. அதன் முதல் கட்டமாக 1 கோடியே 49 லட்சம் தகுதியான குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்க பட்டனர். அவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 1000 ரூபாய் வழங்க பட்டு வருகிறது.
பிரபல ஐடி நிறுவனம் அசத்தல்.., இனி எல்லாரும் முதலாளி தான்.., ஊழியர்களுக்கு கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!
மேலும் சில குடும்ப தலைவிகள் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்க வில்லை என அரசுக்கு மேல்முறையீடு செய்தனர். அதன் படி இரண்டாம்கட்டமாக 7 லட்சம் குடும்பத்தலைவிகள் தேர்தெடுக்க பட்டு அவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்பட்டது.
தற்போது இன்னும் 11.85 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்து இருந்த நிலையில் அவர்களுக்கும் இந்த மாதம் முதல் 1000 ரூ வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் ஆனந்தத்தில் உள்ளனர். இந்த தொகை பொங்கலுக்கு முன்னரே’ வரவு வைக்க படும் என்று எதிர் பார்க்க படுகிறது.