இந்தியா உட்பட பல மாநிலங்களிலும் சாலை விபத்தில் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதன் அடிப்படையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று சமீபத்தில் சட்டம் திருத்தப்பட்ட நிலையில், லாரி ஓட்டுனர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் எல்லா மாநிலங்களிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஊரை விட்டு ஓடிய சிறுமி.., ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் செய்த இளைஞர்கள்., கொக்கி போட்டு தூக்கிய போலீஸ்!!
இப்படி பெட்ரோல் தட்டுப்பாட்டால் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மக்கள் கவலைப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் உணவு டெலிவரி வேலை பார்க்கும் ஒரு இளைஞன் செய்த காரியம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பெட்ரோல் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.