
காதலனுடன் ஊரைவிட்டு ஓடிய பெண். இன்றைய காலத்தில் எல்லாமே டிஜிட்டலாக மாறி கொண்டிருந்தாலும் இந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் மட்டும் தற்போது வரை மாறாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் தனது மகள் காதலித்த பையனையும், பொண்ணையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் மாவட்டத்தில் உள்ள பரோலி என்ற பகுதியில் 19 வயது தக்க பெண் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் 20 வயதுடைய ஒரு இளைஞனை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் காதலிப்பது தந்தைக்கு தெரிய வந்த நிலையில் ஓடி போய் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். அவர்கள் திட்டத்தை அறிந்து கொண்ட தந்தை ஓடி போன பெண்ணை பின்தொடர்ந்து தாம் பெற்ற மகள் என்று கூட பாராமல் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது மகளை காதலித்த பையனையும் சேர்த்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து கொலை செய்த ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.