தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் அமலா பால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் விஜய்யை கல்யாணம் செய்து கொண்டார். அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக டைவர்ஸ் வாங்கி பிரிந்தார்.
இதையடுத்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் போட்டோ ஷூட்டில் இறங்கி கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். இதனை தொடர்ந்து தொழிலதிபர் ஜெகத் தேசாவை காதலித்து கடந்து ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கிறார் என்று ஜெகத் தேசா தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.