TNPSC தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் மூலமாக அரசாங்கத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. மேலும் இந்த தேர்வுகள் எழுதும் சிலர் லட்சம் கொடுத்து தேர்ச்சி பெறுவதாக புகார்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது TNPSC தலைவர், உறுப்பினர்கள் அரசு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் என்பதால் அவர்களை மட்டும் தன்னிசையாக பிரித்து விட முடியாது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
எனவே TNPSC தலைவர், உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உண்டு எனவும் உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்காது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.