இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2024.இந்திய ரிசர்வ் வங்கி 1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். தற்போது போபாலில் உள்ள ரிசர்வ் வங்கியில் மருத்துவ ஆலோசகர் மற்றும் பகுதி நேர மருந்தாளுனர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
இந்திய ரிசர்வ் வங்கி
பணிபுரியும் இடம்:
போபால்
காலிப்பணியிடங்கள் பெயர்:
மருத்துவ ஆலோசகர் (Medical Consultant)
பகுதி நேர மருந்தாளர் (Part-time Pharmacist)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
மருத்துவ ஆலோசகர் – 1
பகுதி நேர மருந்தாளர் – 1
தகுதி:
மருத்துவ ஆலோசகர் –
அலோபதி மருத்துவ முறையில் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் மருத்துவப் பயிற்சியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பகுதி நேர மருந்தாளர் –
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து மருந்தகம் (பார்மசி) டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும் மேலும் விண்ணப்பதாரர்கள் மாநில பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் மருந்தாளுநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
அடிப்படை தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு ரிசர்வ் வங்கியின் பணியாளர் குடியிருப்பில் இருந்து 3-5 கிமீ சுற்றளவில் வசிக்கும் இடம் இருக்க வேண்டும்.
OIL INDIA ஆட்சேர்ப்பு 2024 ! 101 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தகுதி;
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும்.
சமபளம் :
மருத்துவ ஆலோசகர் – ரூ. 1000/- ஒரு மணி நேரத்திற்கு
பகுதி நேர மருந்தாளர் – ரூ. 400/- ஒரு மணி நேரத்திற்கு
விண்ணப்பிக்கும் முறை;
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் வயது,கல்வித்தகுதி,அனுபவசான்றிதழ் ஆகியவற்றை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
தபால் அனுப்பவேண்டிய முகவரி:
இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர்,
ஹோஷங்காபாத் சாலை,
பி.பி. எண்.32,
போபால் – 462 011.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 08.01.2024 முதல் 18.01.2024 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய குறிப்பு:
காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்,