தமிழகத்தில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என கிட்டத்தட்ட எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்கி வருகின்றனர். இதில் சுமார் 1.35 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கிட்டத்தட்ட 96 மாத அகவிலைப்படி கொடுக்கப்படவில்லை என்றும், 4 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும் தொழிற்நுட்ப சங்கம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
ஆனால் போக்குவரத்துறை அமைச்சகம் எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருந்து வந்ததால், கடந்த 19-ந் தேதி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, அண்ணா தொழிற்சங்கம், ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். பி.எம்.எஸ்., உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது. இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை ஆபிஸில் இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் இன்று தொழிற் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் தொழிலார்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் கூறியதில் உடன்பாடு இல்லாததால் நாளை (9-ந்தேதி) வேலை நிறுத்த பேராட்டம் நடைபெறும் என தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளது.