தைப்பூசம் 2024தைப்பூசம் 2024

தைப்பூசம் 2024. கலியுக கடவுள் கந்தனின் சிறப்பு வாய்ந்த நாட்களில் இந்த தை பூசம் மிகவும் விசேஷமானது. முருக பெருமானின் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி வாய்ந்த நாள் என்றும் கூறலாம். இந்த வருடம் தை பூசம் திருநாள் எப்போது ? முருகனை எவ்வாறு வழிபடுவது போன்ற பல பயனுள்ள தகவல்கள் இந்த பதிவில் காணலாம்.

தைப்பூசம் 2024

முருகனை நாம் நினைத்தால் நம் கண் முன் வருவது வேல் வடிவமாகும். வேலும் முருகனும் வேறில்லை. பழனியில் முருகன் ஆண்டி கோலத்தில் இருந்த போது அவரின் தாயார் பார்வதி தேவியார் அசுரர்களை அளிக்க வேல் வழங்கிய நாள் தான் இந்த தை பூசம் திருநாள். அதனால் தான் முருகனின் வேல் வெற்றியின் சின்னமாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பௌர்ணமியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே இந்த தை பூச திருநாள் ஆகும். அதன் படி இந்த வருடம் பூசம் ஆனது வருகிற ஜனவரி 25 வியாழன் கிழமை , காலை 9 .13 மணிக்கு தொடங்கி ஜனவரி 26 காலை 11.07 வரை உள்ளது. பௌர்ணமியும் இணைந்து வருவது சிறப்பு ஆகும்

தை பூசம் கொண்டாட்டமானது எல்லா முருகன் கோவில்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று பக்தர்கள் அனைவரும் முருகனுக்கு பால் குடம் எடுத்து சென்று பால் அபிஷேகம் செய்வது, காவடி செலுத்துவது , விரதம் இருப்பது போன்ற பல வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அதிலும் பழனியில் அதி விஷேசமாக பாத யாத்திரை சென்று முருகனை தரிசிப்பர். கார்த்திகை மாதத்தில் இருந்து மாலை போட ஆரம்பித்து, மார்கழியில் பாத யாத்திரையை தொடங்கி இந்த தை பூசத்தன்று முருகனை வணங்குவர்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, மலேஷியா , சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளிலும் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

2024 ஆண்டில் என்னென்ன நடக்க போகுது? பாபா வங்கா கணித்தது ஒரே வாரத்தில் நடந்ததா? பீதியில் மக்கள்!!

தை பூசம் அன்று முருகனுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபடுவது மிக சிறப்பு. 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை முருகனுக்கு படைத்து முடிந்தவர்கள் சக்கரை பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அது முடியவில்லை என்றால் பருப்பு பாயாசம் நைவேத்யம் வைக்கலாம். இல்லையென்றால் ஒரு டம்ளர் பால் மட்டும் வைத்து முருகனை வணங்கலாம்.

வீட்டில் வேல், முருகனின் சிலை வைத்திருப்பவர்கள் அன்று முருகனுக்கு விரதம் இருந்து அந்த வேல் மற்றும் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெரும்.

அன்று கோவிலுக்கு சென்று முருகனின் அபிஷேகத்தை கண்ணால் காண்பது நல்ல பலன்களை தரும். முருகனின் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் அவை பால் , பன்னீர், இளநீர் போன்றவற்றை கோவிலுக்கு வாங்கி தந்து முருகனின் அருளை பெறலாம்.

கந்தன் என்ற சொல்லுக்கு அர்த்தம் பகைவனின் பராக்கிரமத்தை வற்ற செய்பவன்.

வாழ்க்கையில் தொடர் வெற்றி கிடைக்கவும்

கிரக தோஷங்களின் பிடியில் இருந்து தப்பிக்கவும்

நினைத்த காரியம் நிறைவேற

தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளில் இருந்து தப்பிக்கவும் இந்த தை பூசம் வழிபாடு சிறந்தது ஆகும்.

கிரக தோஷங்களால் அல்லல் படுபவர்கள் தை பூசத்தன்று முருகனிடம் இந்த தோஷங்கள் நமக்கு நல்ல அனுகிரங்களை தருமாறு விண்ணப்பம் வைக்கலாம்.

JOIN WHATSAPP GET IMPORTANT NEWS

இத்தனை நல்ல பலன்களை நமக்கு வழங்கும் முருகனை இந்த தை பூசம் அன்று அனைவரும் கோவிலுக்கு சென்று வணங்கி அவரின் பரிபூரண ஆசியை பெற வேண்டும்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *