கடந்த மூன்று வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் தற்போது கடும் பீதியில் இருந்து வருகின்றனர். இந்த தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதை முழுவதுமாக அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் எல்லா நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர். தற்போது தான் கொரோனாவின் பிடியில் இருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
பொது தேர்வு மாணவர்களே.., இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க.., அமைச்சர் பொய்யாமொழி அறிவிப்பு!!
அதன்படி சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் வீரியம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் நேற்று மட்டும் 256 பேருக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த 10 பேரும், கோவை, செங்கல்பட்டு மாவட்டத்தில் தலா 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 184 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!