போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலார்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்றத்தில் போடப்பட்ட வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்துள்ளது. மேலும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தொ.மு.ச பொருளாளர் நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் தொழிலார்களின் ஓய்வூதிய உயர்வு குறித்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இது சட்ட விரோதமான செயல் என்று கூறி மதுரை உயர் நீதி மன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடுத்துள்ளார். பண்டிகையின் போது பேருந்து ஓட்டுனர்கள் இப்படி வேலை நிறுத்தம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. அதனால் உடனடியாக வேலைநிறுத்தத்தை தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மக்களே.., மாஸ்க் கட்டாயம்.., தமிழகத்தில் வீரியமெடுக்கும் கொரோனா வைரஸ்., ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?
இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்தி வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இதை ஏற்று கொண்ட நீதி மன்றம் இந்த வழக்கை நாளை ஒத்தி வைத்துள்ளது.
மேலும் தொ.மு.ச. பொருளாளர் நடராஜன் அவர்கள் பேட்டியின் போது தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிறைவேற்றுவர் என்று எதிர்பார்க்கிறோம். பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன. அண்ணா தொழிற்சங்க பேருந்துகள் தன்னிச்சையாக செயல்படுவதால் அவை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்குமா ? என்று நாளை மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிய வரும்.