உத்தரபிரதேசம், அயோத்தியில் படு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வருகிற ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு கிட்டத்தட்ட 7000 சிறப்பு விருந்தினர்களை கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்புகள் விடுக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் விடப்பட்டுள்ளது. எனவே கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் 18 மொழிகளில் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முக்கியமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற ஜனவரி 22ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அன்று எந்த ஒரு மதுக்கடைகளும் திறக்க கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் விதிகளை பின்பற்றாமல் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.