மதுரை ஜல்லிக்கட்டு 2024. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆன்லைன் முன்பதிவானது இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து நாளை பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 24 மணிநேரம் நடைபெறும்.
மதுரை ஜல்லிக்கட்டு 2024
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின் போது மதுரையில் பெரும் விமர்சையாக கொண்டாடப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் தங்களின் விவரங்களை madurai.nic.in என்ற ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார். போட்டியின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆன்லைன் முன்பதிவில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தனித்தனியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின் கால்நடை மருத்துவர் தகுதி சான்றிதழ், காளை உரிமையாளர்களின் ஆதார் அடையாள அட்டை, புகைப்படம் போன்றவை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாடு பிடி வீரர்கள் தங்களுக்கான ஆதார் அடையாள அட்டை, புகைப்படம் போன்றவற்றை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.01.2024) ! முக்கிய இடங்களின் பவர் கட் விவரங்கள் !
முன்பதிவு செய்தவுடன் அவர்களின் ஒப்புதல் குறித்த செய்தி போட்டியாளர்களின் கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். அவர்கள் போட்டிக்கு தகுதியானவர் என்று உறுதி செய்த உடன் ஒரு லிங்க் அனுப்பப்படும். அதில் சென்று அவர்கள் போட்டிக்கு தேவையான டோக்கன் ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியானது 3 இடங்களில் நடைபெறுகிறது. ஜனவரி 15 ல் அவனியாபுரம், ஜன.16 ல் பாலமேடு , ஜன.17 ல் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. இந்த 3 இடங்களில் தலா 1000 காளைகள் போட்டியில் பங்கேற்க உள்ளன. மேலும் 700 கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்
காளை பதிவு செய்ய | CLICK HERE |
காளையை அடக்குபவர் பதிவு செய்ய | CLICK HERE |
போட்டியை காண்பதற்கான முன் ஏற்பாடுகள், மருத்துவ குழு போன்ற பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.