பொங்கல் சிறப்பு ரயில்கள் 2024. தமிழர் விழாவான பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு முன்பதிவு ரயில்கள் இயக்கப்படும். மேலும் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்தி வெளியிட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு ரயில்கள் 2024
பண்டிகை வருகிற ஜனவரி 14, 15 , 16, 17 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் கொண்டாட படஇருக்கிறது. இந்த தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தற்போது அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து தடை பெற்றுள்ளது.
TET தேர்வர்களே.., இந்த தேதியில் தேர்வு கன்பார்ம்..,எப்போது தெரியுமா? TRB வெளியிட்ட உத்தேச கால அட்டவணை!!
மேலும் தனியார் பஸ்கள் மற்றும் ரயில்கள் முன்பதிவும் போதுமானதாக இல்லை.இதனால் தமிழக அரசு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி ஜன.11, 13, 16 ஆகிய தேதிகளில் தாம்பரம் to நெல்லை வழியாக இரவு 9.50 க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இது மதுரை, தென்காசி வழியாக செல்லவிருக்கிறது.
மீண்டும் மறுமார்க்கமாக ஜன.12, 14, 17 ஆகிய தேதிகளில் நெல்லை to தாம்பரம் ரயில் பிற்பகல் 2.15 க்கு இயக்கப்படும். இந்த ரயிலில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பின்னர் தாம்பரம் to தூத்துக்குடி வழியாக முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்படும். அவை ஜனவரி 14, 16 (ஞாயிறு , செவ்வாய் )ஆகிய தேதிகளில் செல்லவிருக்கிறது. பஸ் ஊழியர்கள் போராட்டத்தால் ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.