தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே அஜித் மீது சில சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. சொல்ல போனால் கேப்டன் மறைவுக்கு வராமல் பெண்களுடன் டான்ஸ் ஆடுனது, அப்புறம் ரசிகர்கள் போனை வாங்கி போட்டோஸ் டெலிட் செய்தது என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் நடந்து கொண்ட விதத்தை பற்றி காமெடி துணை நடிகை பிரியங்கா சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்தை காணவில்லை என்று இயக்குனர் முதல் பலரும் தேடி பார்த்தனர். அவர் வரும் வரை ப்ரேக் எடுக்கலாம் என்று நான் என் அம்மாவுடன் உட்கார்ந்தேன். அப்போது என் அம்மா என்ன ஆச்சு என்று கேட்டார். அதற்கு அஜித் அண்ணாவை காணோம் என்று கூறினேன். அதற்கு என் அம்மா அப்ப இது யாரு என்று கூற., எனது அம்மா அருகில் புல்லுக்குள் படுத்து கொண்டு முகத்தை துணியால் மூடிக்கொண்டு படுத்திருந்தார் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.