தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் சமையலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில் நயன் பிராமண பெண்ணாக நடித்திருப்பார். மேலும் கோவில் பிரசாதம் செய்யும் ஒரு பிராமண குடும்பத்தில் வளர்ந்து வரும் நயன்தாரா கேட்டரிங் படிப்பில் சேர ஆசைப்பட்ட நிலையில் அவர் அப்பா கேட்டரிங் என்றால் அசைவ உணவு சமைக்க வேண்டிவரும் என்று கூறி தடை போடுகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய் நயன்தாராவிடம் ராமர், சீதை , லக்ஷ்மணன் காட்டில் இருக்கும் போதே அசைவ உணவு சமைத்து சாப்பிட்டனர் என்று கூறுகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த வசனம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது இந்த வசனம் முற்றிலும் ஹிந்துக்களின் மத உணர்வுகளை பாதிப்பதாக “விஸ்வ ஹிந்து பரிஷத்” அமைப்பினர் மும்பை போலீசாரிடம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருந்து நீக்கும் வரை நெட்பிலிக்ஸில் படத்தை வெளியிட தடை போடப்பட்டுள்ளது.இதை அறிந்த பட தயாரிப்பு நிறுவனம் ஜீ ஸ்டுடியோஸ் அவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.மேலும் சர்ச்சைக்குரிய இந்த காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் வெளியிடப்படும் என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.