சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து வரும் மகாலட்சுமி லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தின் போது பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இருவரும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தான் ரவீந்தர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரீவியூ கொடுக்கத் தொடங்கிவிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ரவீந்தருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ICUல இருந்து ரவீந்தர் செய்த காரியம்பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது ரவீந்தர் தனது கடமை உணர்ச்சிக்கு அளவில்லாமல் மூக்கில் டியூப் வைத்திருக்கும் நிலையில் பிக்பாஸ் ரிவியூ கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் முதலில் உங்கள் உடம்பை பாருங்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.