தென்னிந்திய தமிழ் சினிமாவில் விஜய்யை தொடர்ந்து குழந்தைகளை அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தற்போது இவர் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது 24AM ஸ்டுடியோ சார்பில் ராஜா தயாரித்த இந்தப் படத்தை தற்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வந்தார். 24 AM ஸ்டுடியோ இந்த படத்திற்காக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக வாங்கிய நிலையில், அதை நாங்கள் திருப்பி தருகிறோம் என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் பொருப்பேற்றது.
ஆண் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு சிறுமி.., கர்ப்பத்துக்கு காரணம் யார்? வலைவீசி தேடி வரும் போலீஸ்!!
ஆனால் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெறும் 3 கோடி மட்டுமே கொடுத்ததாகவும் அதனால் அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அயலான் படம் ரிலீசுக்கு தடை இல்லை என்று கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை சிவா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.