பொதுவாக தமிழகத்தில் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளிலோ அல்லது தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளிலோ டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோவது சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் கொடுக்கும் விதமாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற ஜனவரி 16ம் தேதி மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதே போல் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த மூன்று நாட்களிலும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருப்பதற்காக தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கடந்த வருடம் பொங்கல் திருநாளன்று கிட்டத்தட்ட ரூ. 850 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.