எதிர்நீச்சல் சீரியல் :
சன் டிவி தொலைக்காட்சி மக்களை கவர வேண்டும் என்று புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. எத்தனையோ சீரியல்கள் வந்தாலும் சில தொடர்கள் மட்டுமே மக்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. அப்படி மக்களை வெகுவாக கவர்ந்த சீரியல் தான் திருமுருகன் இயக்கி நடித்து வரும் எதிர்நீச்சல். இந்த தொடர் பெண்களின் அடிமைத்தனத்தை பற்றி எடுத்திருந்தாலும், இந்த அளவுக்கு ரிச்சாக ஒரு காரணம் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். இவர் நடித்த சமயத்தில் டிஆர்பி டாப்பில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து இறந்த நிலையில், அவர் நடித்த குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராம மூர்த்தி நடித்து வருகிறார். அதில் இருந்து இந்த தொடரை சிலர் பார்ப்பதில்லை. மாரிமுத்து கூறும் இந்தாமா ஏய் என்ற வசனம் சீரியலில் கேட்கவில்லை என்று பலரும் வருந்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் மாளவிகா மாலத்தீவுக்கு சென்று கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.