தென்னிந்திய தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சங்கீதா. கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார். தற்போது பிரபல டிவி சேனலில் நடுவராக இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து பிரபல பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது மாமியாருடன் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, கிரிஷ் உடைய தாயார் வீட்டிற்கு வந்து சங்கீதாவிடம் நீ என் மகனை டைவர்ஸ் செய்ய போறியா என்று கேட்டுள்ளார். அதற்கு சங்கீதா யார் உங்களிடம் சொன்ன என்று கேட்க, ஊடகங்களில் பார்த்தேன் என்று கூறியுள்ளார். இதற்கு சங்கீதா, அவர்களுடைய கன்டென்ட்க்காக இப்படி எல்லாம் ஒரு பொய்யான வதந்திகளை கிளப்ப தான் செய்வார்கள். அதை ஏன் நீங்கள் நம்புகிறீர்கள் என்று மாமியாரை சமாதானம் படுத்தியதாக சங்கீதா கூறியுள்ளார்.