தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் நடித்து நேற்று வெளியான திரைப்படம் தான் அயலான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ரவிக்குமார் இயக்கிய இன்று நேற்று நாளை படத்தை விட இப்படம் சுமாராக தான் இருக்கிறது என்று டாக் போய் கொண்டிருந்தாலும், குழந்தைகளை பேமிலி ஆடியன்ஸை கண்டிப்பாக கவர்ந்து இழுக்கும் என சொல்லப்படுகிறது. சிவாவுடன் சேர்ந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்தால் போதும் என்பதால் சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான அயலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அயலான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 9 கோடியை வசூலித்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அதிக வசூல் வர வாய்ப்பு இருப்பதாக சொல்ல[சொல்லப்படுகிறது.