கோலிவுட்டில் விஜய், அஜித்தை வைத்து படம் எடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குனர் எழில். பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கடந்த 2013ம் ஆண்டு விமலை வைத்து தேசிங்கு ராஜா என்ற காமெடி படத்தை இயக்கினார். இப்படத்தில் விமலுடன் இணைந்து பிந்து மாதவி, ரவி மரியா, சிங்கம் புலி, சூரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எழில் இயக்கத்தில் விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தின் பார்ட் 2 விரைவில் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக விமல் நடிக்க ஹீரோயினாக நடிகை பூஜிதா பொனாடா மற்றும் ஹர்ஷிதா கதாநாயகியாக நடித்து வருகின்றனர்.
2016 ஆண்டு 29 பேருடன் மாயமான விமானம்.., 7 ஆண்டு கழித்து கண்டுபிடிப்பு.., மத்திய அரசு அறிவிப்பு!!
அதுமட்டுமின்றி நீண்ட வருடங்களுக்கு பிறகு எழில் படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்க இருக்கிறார். ஃபர்ஸ்ட் பார்ட்டில் நடித்த பல நடிகர்கள் இந்த படத்திலும் நடித்து வருகின்றனர். ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.