அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொளகை முறைகேடு வழக்கில் 3 முறையை தொடர்ந்து தற்போது 4 முறையாக அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஜனவரி 18 ம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலை குறி வைக்கும் ED
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது 4 வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை அனுப்பப்பட்ட சம்மனை கெஜ்ரிவால் நிராகரித்து விட்டார். இந்த வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் எம்பி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவதூறு பரப்பிய யூடியூபருக்கு 50 லட்சம் Fine.., பின்னணியில் இருந்த அதிமுக?.., கோர்ட்டை அதிரவைத்த நீதிபதி!!
எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அமலாக்க துறை சட்ட விரோதமாக செயல்படுவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். பா.ஜ .க அரசு தன்னை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் இதை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மனீஷ் சிசோடியா மற்றும் எம்பி உள்ளிட்டோரை கைது செய்தும் அவர்களிடம் இருந்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
தற்போது அமலாக்க துறை பா.ஜ .க வின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்று கெஜ்ரிவால் கூறிவருகிறார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு செய்வது பா.ஜ .க வின் பழிவாங்கும் செயல் என்றும் தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே 3 முறை அனுப்பபட்ட சம்மனை நிராகரித்து விட்டார். வருகிற ஜனவரி 18 ம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு தற்போது அனுப்பிய 4 வது சம்மனையும் அவர் நிராகரித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.