அன்பறிவு மாஸ்டரின் KH 237.., ஷூட்டிங்கிற்கு கண்காட்டிய ஆண்டவர்.., அப்பறம் என்ன ஒரு சம்பவம் இருக்கு?
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2, தக் லைஃப் மற்றும் கல்கி என பிசியாக இருந்து வரும் நிலையில் நேற்று KH 237 படத்தோட அப்டேட் வெளியாகி இருந்தது. அதாவது விக்ரம், லியோ மற்றும் கேஜிஎப் உள்ளிட்ட பெரிய படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர்கள் அன்பு மற்றும் அறிவு.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இவர்களை அன்பறிவு என்று தான் அழைப்பார்கள். ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி வந்த இவர்கள் தற்போது KH 237 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளனர். சண்டை காட்சிகளையே அவர்கள் தெறிக்கவிடும் அளவுக்கு எடுத்திருப்பார்கள், அவர்கள் எடுக்கும் படத்தை பற்றி சொல்லவா வேண்டும். எனவே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
செங்கோடா., கைய பிடிங்கோடா.., என்னது.., வயிறு குலுங்க சிரிக்க வைத்த “தேசிங்குராஜா 2” வரப்போகுதா?
இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அன்பறிவு மாஸ்டர் இயக்கும் KH 237 படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கும் எனவும், அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் வில்லனாக நடிக்கும் கல்கி திரைப்படம் மே 9ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.