பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது அங்கு கலந்து கொண்ட அனைவரும் தமிழர்களின் மரபான ஆண்கள் வேஷ்டி சட்டையில், பெண்கள் புடவையை அணிந்து, கரகாட்டம், தெருக்கூத்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் மேளதாளங்களுடன் கொண்டாடினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி பல விளையாட்டுகள் வைத்து பரிசுகளும் கொடுக்கப்பட்டன. மேலும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அங்கு வேலை பார்த்த பணியாளர்களுடன் குத்தாட்டம் போட்டு நடனமாடி அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் என்று கர்வம் கொள்ளாமல் சக ஊழியர்களுடன் சங்கர் பாபு ஆடியது அங்கிருந்த அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தியது. \